rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
BLOGS
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
raguveeradayal
thiruppathi

Categories
Religion
Books
What is an RSS feed?
RSS Feed 
paamaran.rediffiland.com/  
Saturday 11 October, 2008
By  raguveeradayal thiruppathi   19:30 | 5/Oct/2007 |  0 Comment(s)
  Add raguveeradayal thiruppathi as Friend     Write to raguveeradayal thiruppathi     Forward this link
திருப்பாதுĨ 5;மாலை

2. திருநாமப்பத்ததி

21.       என்னு ளக்களக்  காதலை  வென்  றதாற்

            பன்னு  மெய்ப்பொரு  ணாமர்க  ளாம்புகழ்

            மன்னு  மால்பத  மம்முனி  யந்நிலை

            யென்னு  மச்சட  சித்துக  ளேத்துவன்.

 

22.       தமமறுந்  தமர்க  டன்மத்  தமிழ்மறை  தலைமேற்  றாங்காத்

            தமியர்கள்  குரவு  தீரத்  தண்ணளிப்  பெரிய  வள்ளல்

            தமரெனத்  திரும  ணாள  னவர்திறத்  தருமை  பூக்க

            அமையுமச்  சடகோ  பன்தா  னவனடி  நிலையு  மானான்.

 

 

23.       திருமணிப்  பாதூ !  நீதாங்  கிருமறைக்  கிறுதி  யென்றே

            விரிநிலத்  திருவ  முங்கி  விளங்கரு  ளரங்கன்  தாணின்

            றொருநலத்  துடன்பி  றந்தா  ருயர்திணை  வழுத்து  மாறல்

            விரதிநின்  சடகோ  பப்பேர்  புனைந்திறை  யுருவி  ரித்தான்.

 

24.       தொண்டர்கோ  முனிவன்  தானுந்  தொடுகழற்  பாதூ!  நீயுங்

            கொண்டதா  லோது  சீர்த்தி  யொண்சட  கோபப்  பேராற்

            பண்டுவாய்  மொழிமு  னோனாற்  பகரதன்  பொருளு  முன்னால்

            அண்டமீ  திரண்டு  மார்க்கு  மாகுமா  றாயிற்  றன்றே.

 

25.       கவிஞர்கட்  கிறைவன்  செந்நா  வண்சட  கோபன்  பாடுஞ்

            செவிகளுக்  கினிய  செஞ்சொல்  லிசைகளா  யிரமு  மான்றோர்

            செவிமடுத்  தடிநி  லாயுன்  சீரொலி  யமுத  நாம

            மலருளத்  தினிக்கு  மாறன்  னவனதென்  றொருமை  யோர்வார்.

 

26.       கேசவன்  தமர்கள்  வாழத்  திருவெழும்  பருவ  மேழாய்

            மாசறுத்  தோங்கி  யன்னா  னாதரத்  தாத  ரேறுந்

            தேசுடைச்  சடகோ  பன்பேர்  நீசுமந்  தவனின்  மாணப்

            பேசுருந்  தொண்டு  தானாம்  பெற்றிநற்  பாதூ!  பெற்றாய்.

 

27.       அரிமணத்  தளிம  மாகி  யவன்பணி  யுருத்த  ரித்தாய்

            குரைகழற்  குறடி  ரண்டாய்த்  தொண்டிரு  மடங்குகொண்டாய்

            திருவடித்  தொழும்பர்  பாலுன்  விருத்தியே  விளங்கப்  பின்னும்

            நிரைதிருப்  பாதூ!  பூண்டாய்  நீசட  கோப  னாமம்.

 

28.       கவியுனைச்  சடகோ  பன்தான்  பாடியாட்  பட்டான்  பாவால்!

            அவனதின்  னமுத  நாம  மணிந்தவற்  காட்பட்  டாய்  நீ

            உவகையிற்  பொறைய  யளந்தோ  னும்மையா  ளுடையனானான்

            புவனநன்  றுற்ற  வெல்லா  மூவர்நும்  முனிமை  யொன்றில்.

 

29.       விந்தம  டக்கிய  விந்தையொ  டுந்தொரு  சிந்துவு  றிஞ்சி  யுடன்

            வந்தழி  மாயர்கள்  மாய்ந்தழி  தீயென  வாண்மைவ  ளர்ந்தெ  ழுமா

            சிந்தனெ  னுங்குட  முந்தன்மொ  ழித்திரு  வென்றுமி  தொன்று  ளதென

            றந்தமு  தன்மறை  பாதுகை  யச்சட  கோபவ  ணத்து  மிழ்வாய்.

 

30.       மன்னருண  லந்திகழ  ரங்கனணி  பாதூ!

            என்னிடையு  னாயிரந  டைக்கவிபி  றக்கத்

            தன்னடையி  னல்குநல  மல்குசட  கோப

                                    னென்னுமிது  நாமமுன  தேலுமிக  மேலும்.

Category: Religion | Permalink